பாபர் மசூதி இடிப்பு தினம்: பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் SPDI கட்சியினர் பாபர் மசூதிக்கு நீதி கேட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-12-06 11:19 GMT

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் SPDI கட்சியினர் பாபர் மசூதிக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டிசம்பர் 06 இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு தினமாகும். மசூதி இடிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் SPDI கட்சியினர் பாபர் மசூதிக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது இப்ராஹிம் தொகுப்புரை வழங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் Dr. A. முஹம்மது ரபீக், மாவட்ட துணைத்தலைவர் M. முஹம்மது பாரூக் , மாவட்ட செயலாளர் M. அகமது இக்பால் , மாவட்ட பொருளாளர் Dr. M. ஜியாவுதின் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி, SPDI கட்சியின் பெரம்பலூர் தொகுதி தலைவர் முஹம்மது ரபிக், பெரம்பலூர் தொகுதி செயலாளர் A.சித்திக்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் என். செல்வதுரை, கிறிஸ்து நல்லென்ன இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரினோ பாஸ்டின் , பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் F.செய்யது அபுதாஹிர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் திருச்சி மண்டல தலைவர் S.அமீர் பாஷா எழுச்சி உரையாற்றினார். இறுதியாக SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் A. அப்துல் கனி நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News