மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூரில், பள்ளி மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

Update: 2021-12-24 23:30 GMT

பள்ளி மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி  உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் (பொ) வாணி மற்றும் அவரது குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளிடம், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், போட்டிகள் நடத்தியும், பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை காவல் ஆய்வாளர் வாணி  வழங்கினார்கள்.

மேலும் மது விற்பது, காய்ச்சுவது, ஊரல் போடுவது போன்ற குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அது குறித்த தகவலை 10581என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்கலாம் இரகசியம் காக்கப்படும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

Tags:    

Similar News