பெரம்பலூரில் சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு நாடகம்

பெரம்பலூரில் சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

Update: 2022-03-03 16:19 GMT

பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ்  வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்திடவும், சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும் தெருமுனை நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் குன்னத்தில் நடைபெற்றன.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளார்/சார்பு நீதிபதி ஆர்.லதா, தலைமையில் திருச்சி கலைக் காவிரி கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார்  ஒருங்கிணைப்பில் இசை மற்றும் நடனம் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் தெரு நாடகத்தின் மூலம் பெண் கல்வியின் அவசியத்தையும், குழந்தைத் திருமணத்தினை தடுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளின் சட்ட வழிகள் குறித்த வழிமுறையினையும், கதைகள் மூலமாகவும், நாடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளை பாடியும் மக்களிடயே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் முனிக்குமார் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர்  சிவகாமசுந்தரி, குன்னம் காவல் ஆய்வாளர், பெரம்பலூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர்கள். வழக்கறிஞர்கள்  சங்கர் மற்றும் ராமசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News