பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நூத்தப்பூர் கிராமத்தில் தனிமையில் உள்ள முதியோர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதியோர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் ஆதரவற்ற முதியோர்களை இல்லத்தில் வைத்து பாதுகாத்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது முதியோர்களுக்கு முககவசம் மற்றும் உணவினை சிவம் அறக்கட்டளை இயக்குநர் ஆ.சிற்றம்பலம், நிர்வாக இயக்குநர் கவிதா சிவகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.