பெரம்பலூர் சிறப்பு முகாமில் 13,513 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
பெரம்பலூர் சிறப்பு முகாமில் 13,513 பேர் கொரோனா தடுப்பூசி செலுததிக் கொண்டனர் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் 13வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 4550 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2834 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3166 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2963 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 13,513 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரம்பலூர் வடக்கு அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் பகுதி அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி மையங்களை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.