லக்கிம்பூரில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் அஸ்தி பெரம்பலூர் வருகை
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் அஸ்திக்கு விவசாய சங்கத்தினர் வீரவணக்க அஞ்சலி.
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் காரை ஏற்றியதால், 5 விவசாயிகள் மரணம் அடைந்தனர். அந்த விவசாயிகளின் அஸ்தியை எடுத்து நாடு முழுவதும் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 24-ம் தேதியான இன்று, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பாக உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி கொண்டுவரப்பட்டது, இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பால் உற்பத்தியாளர் விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிஜடியு, விசிக, திமுக, உள்ளிட்ட அமைப்புகள், மற்றும் கட்சியின் விவசாயப் பிரிவு தலைவர்கள் தொண்டர்கள் விவசாயிகள் பலர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவரும் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் செல்லதுரை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் முகமது அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், திமுக பிரதிநிதி முகுந்தன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் வீர செங்கோலன், மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.