பெரம்பலூரில் மாணவர்கள் உதவி தொகையுடன் கல்வி பயில்வதற்கான திறனறி தேர்வு

பெரம்பலூரில் மாணவர்கள் உதவி தொகையுடன் கல்வி பயில்வதற்கான திறனறி தேர்வு தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2022-03-07 11:59 GMT
திறனறி தேர்வினை தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்கள் சார்பாக வருடந்தோறும் கல்வி உதவித்தொகைக்கான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.

அதேபோல் 2022-2023 ஆண்டுக்கான கல்வி உதவி தொகைக்கான தேர்வு 07-03-2022 அன்று தொடங்கப்பட்டது. இத்தேர்வின் முதற்கட்டமாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டது.

தேர்வுக்கான வினாத்தாளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக  வேந்தர், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர்  சீனிவாசன் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் அம்மாணவ மானவிகளிடம் தேர்வுகளை கையாள்வது குறித்து தன்னபிக்கை உரையாற்றினார். மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விநிறுவனங்களில் உயர்க்கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றார்.இந்த தேர்வு மூலமாக சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள கட்டண சலுகை வழங்கப்படவுள்ளது.

இந்த தேர்வானது அனைத்து மாவட்டங்களில் உள்ள சுமார் 300 அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 15000 மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை மாணவர்களுக்கு நேரடியாகவும் இணையவழித் தேர்வாகவும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை அனைத்து மாணவ மாணவர்களும் பயன்படுத்தி வெற்றி பெற்று கல்வி கட்டணச்சலுகை பெறவேண்டுமாய் கல்வி நிறுவனங்களின் சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறது. இந்த துவக்க விழாவில் அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News