வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.;
லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை நடத்திய வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தொழில்நுட்பப் பிரிவில் ஒப்பந்ததாரர்களிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹேமச்சித்திரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 51 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணக்கில் வராத பணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.