பெரம்பலூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மாநில அளவிலான கருத்தரங்கம்.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஆகியோர் காணொளியில் ஆய்வு;

Update: 2022-02-26 15:00 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில்  ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா முன்னிலையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்  ப.ஸ்ரீவெங்கட பிரியா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு  மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்; மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா  மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வேளாண்மைத்துறை, சகோதரத் துறைகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 20 கிராம பஞ்சாயத்துகளில் முதற்கட்டமாக இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கம் 26.02.2022 இன்று மதிப்பிற்குரிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர், வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலைத் துறை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஆகியோர் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினர்.

இத்திட்டத்தினை கிராம அளவில் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுத்தக் கூடிய திட்டங்களைப்பற்றியும் அதனால் விவசாயிகள் அடையும் நன்மைகள் குறித்தும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துரைதனர்.

இதில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குநர் லலிதா, வேளாண்மை இணை இயக்குநர் ச.கருணாநிதி, தோட்டக்கலை துணை இயக்குநர் மா.இந்திரா, செயற்பொறியாளர்(வே.பொ) கிளாட்வின் இஸ்ரேல், துணை இயக்குநர்(வே.வ) சிங்காரம் மற்றும் வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News