பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பள்ளிகளுக்கு சீர் வழங்கும் விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளுக்கு அறக்கட்டளை சார்பில் சீர் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update: 2021-11-26 10:33 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளுக்கு அறக்கட்டளை சார்பில் சீர்வரிசை  பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் இயங்கி வரும் டான் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அங்கன்வாடி தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீர்வரிசையாக வழங்குவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் மித்ரா மற்றும் ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில், அங்கன்வாடி தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் சித்தளி மற்றும் பேரளி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளுக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

அங்கன்வாடி பள்ளிக்கு தேவையான சேர்,பாய், சமையல் பாத்திரம் விளையாட்டு பொருட்கள், வரைபட அட்டை உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை,மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு இவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொருட்களை அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்கள் ராதிகா, ரெங்கநாயகி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்,மேலும் விழாவில் மாணவர்களின் அடிப்படை கல்வி குறித்து கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரி மாணவிகள் வைஸ்ணவி, கோமதி, மகாலட்சுமி, பவித்ரா, பிரவினா, திவ்யபாரதி, உள்ளிட்ட மாணவிகள் வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அறக்கட்டளை துறை தலைவர் கார்மேகம்,உதவி பேராசிரியர் மோகன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் மூக்காயி. உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News