பெரம்பலூர் 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் நகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.;
பெரம்பலூர் நகரப்பகுதிகளில் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது/ திரும்பும் இடமெல்லாம் பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் நகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா துண்டுபிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இப்பகுதியில் இருக்கும் மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் இப்பகுதியில் உள்ள குடிநீர் வசதி ,பாதாள சாக்கடை, கழிவுநீர் வசதி ,மின் விளக்கு வசதி, தரமான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்த்து தருவேன் என வாக்குறுதி தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருடன் அ.தி.மு..க கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்கு சேகரித்து வருகின்றனர்.