விறுவிறுப்பாக நடந்த பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக கிளை தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.;

Update: 2021-12-13 11:30 GMT

பெரம்பலூரில் அதிமுக உட்கட்சி தேர்தலில் பங்கேற்ற நிர்வாகிகள். 

பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில்,  பெரம்பலூர் நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்எல்ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சுப்பிரமணியன், பெரம்பலூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள்  பாரதிமோகன், கே.ஜே.லெனின், அசோக்குமார், முருகானந்தம் மற்றும் பெரம்பலூர் நகர தேர்தல் ஆணையாளர்கள் சோழா அறிவழகன், பாஸ்கரன் ரெங்கராஜ் ஆகியோர் செயல்பட்டு, தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தேர்தல் நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News