பெரம்பலூர் மாவட்டத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நண்பர்கள் குழு சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-10-15 11:32 GMT

அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இளைஞர்களின் எழுச்சி நாயகன்,முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்துல் கலாம்  உருவப்படத்திற்கு நம்மால் முடியும் நண்பர்கள் குழு மற்றும் - சிறுவர் சிறுமிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News