பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;
மக்காத தன்மையுடைய நெகிழிபைகள் பயன்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளது.இந்த நிலையில் பெரம்பலூரில் மக்காத நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் புதியபேருந்துநிலையம் பகுதியில்சோதனை செய்தனர்.அப்போது 6 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட 60 கிலோ நெகிழிபைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என ஆணையர் குமரி மன்னன் தெரிவித்துள்ளனர்.