அரசு மருத்துவமனையில் 5ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ தினம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 5ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2021-12-23 19:22 GMT

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவ மனையில் நடந்த ஐந்தாம் ஆண்டு சித்த மருத்துவ தினம்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் ஐந்தாம் ஆண்டு  தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் டாக்டர் பாரதி பிரியா. தலைமை தாங்கினார்.பல் மருத்துவர்.காயத்ரி  முன்னிலை வகித்தார்.

 சிறப்பு அழைப்பாளராக சித்த மருத்துவர் மணிமேகலை கலந்துகொண்டு 5 வது ஆண்டு  தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு முதன்மை மருத்துவ அலுவலர் குத்து விளக்கு ஏற்றி சித்தரின் படத்திற்கு மலர் தூவி சித்த மருத்துவத்தின் பயன்கள் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் ராஜேந்திரன் சித்த மருந்தாளுநர்,தலைமை செவிலியர் மாதேஸ்வரி, பொன்மணி, மருந்தாளுநர் விமலா, ஆய்வக நுட்புனர்கள் ஜஸ்டின் தினகரன், விஜயா, பரிமலா ,செவிலியர் புவனா, சித்த மருத்துவ பணியாளர் சிவசங்கரி, மேகலா , சமூக ஆர்வலர் செல்வராஜ்,பழனிவேல்ராஜா ஆலோசகர் அரசு மருத்துவமனை கிருஷ்ணாபுரம்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News