மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு

பெரம்பலூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறித்து சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2021-12-02 06:18 GMT

நகை பறி கொடுத்த மூதாட்டி மணி.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இழந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மணி. இவர் இளந்தங்குழி கிராமத்தில் இருந்து ஜமீன் பேரையூர் செல்லும் ரோட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டி மணி எதிர்பாராத போது அவரை அடித்து தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு கூத்தூர் செல்லும் சாலையில் தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் தொடர்பாக மூதாட்டி மணி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News