பெரம்பலூரில் 45 கிலோ குட்கா, பான்மசாலா பதுக்கிய 4 பேர் கைது

பெரம்பலூரில் கடைகளில் விற்பனைக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்த 45 கிலோ குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

Update: 2021-07-18 18:24 GMT
பெரம்பலூரில் கடைகளுக்கு பான்மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்களை சப்ளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து45 கிலோ பான்மசாலா குட்காவைப் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் நகரபகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து காவல்த்துறை துணைகண்காணிப்பாளர் சரவணண் தலைமையிலான போலீசார் டீ கடை, பெட்டிகடை ஆகியவற்றில் அதிரடி சோதணை நடத்தினர்.

அந்த சோதணையில் துறைமங்களம் மற்றும் பழையபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

அந்த வகையில் ரூபாய் 49 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்சிங்(25),விக்ரம்சிங்(27),கோவித்சிங்(21)மற்றும் மாது(38) ஆகிய நான்குபேரை போலிஸார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 50 ஆயிரத்து 300 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் தலைமறைவான 2 பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News