தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13- வது மாநாடு

தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13- வது மாநாடு நடைபெற்றது.

Update: 2022-03-06 14:30 GMT

பெரம்பலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் பொன். ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெரியசாமி துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு அறிக்கை சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் மணிமேகலை சமர்ப்பித்தார்.

மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மற்றும் துறைவாரி சங்க நிர்வாகிகளும் வாழ்த்தி பேசினார்கள். மாநாடு நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மணிமேகலை (வேப்பூர் ஒன்றியம்), மாவட்ட செயலாளராக கொளஞ்சி வாசு (ஆலத்தூர் ஒன்றியம்), பொருளாளராக மருதாம்பாள் பெரம்பலூர் ஒன்றியம், மாநில செயற்குழு உறுப்பினராக ரஞ்சிதா (வேப்பந்தட்டை ஒன்றியம்), மாவட்ட துணைத் தலைவர்களாக சாந்தி (வேப்பூர் ஒன்றியம்), செல்வி (வேப்பந்தட்டை ஒன்றியம்), ரேவதி (ஆலத்தூர் ஒன்றியம்), ஏவல் மேரி (பெரம்பலூர் ஒன்றியம்), இணைச் செயலாளர்களாக தமிழ்மணி (ஆலத்தூர் ஒன்றியம்), வெங்கடாசலம் (வேப்பூர் ஒன்றியம்), செல்வராணி (வேப்பந்தட்டை ஒன்றியம்), செல்வி (பெரம்பலூர் ஒன்றியம்), ஆகியோரும் தணிக்கையாளர்களாக  அருள்மொழி, லட்சுமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர் .நிறைவாக மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Tags:    

Similar News