pan-aadhaar link-பான்-ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி அறிவிப்பு..! எப்படி இணைக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க.
pan-aadhaar link-பான்-ஆதார் இணைக்க ஜூன்30ம் தேதி கடைசிங்க. அதனால், பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் உடனே இணையுங்கள்.;
pan-aadhaar link-பான் -ஆதார் இணைப்பு (கோப்பு படம்)
pan-aadhaar link-பான்-ஆதார் இணைப்பு என்பது வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139AA இன் படி, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த இரண்டு கார்டுகளையும் ஜூன்30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
பான்-ஆதார் இணைப்புச் சரிபார்ப்பு நிலை:
நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. அதனால், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டை செயல்படாது
இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் ஏப்ரல் 1, 2023 முதல் செயல்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வருமான வரித்துறை அதன் ட்வீட்டில், "உங்கள் பான் மற்றும் ஆதாரை இணைக்க கடைசி தேதி நெருங்குகிறது விரைவில், IT சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.6.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.7.2023 முதல்,அதாவது ஜூலை மாதம் முதல் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயல்படாது. அதனால் இன்றே இணைக்கவும்!" என்று வருமான வரித்துறை பதிவிட்டுள்ளது.
pan-aadhaar link
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139AA இன் படி, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஜூன் 30ம் தேதிக்குள் இந்த இரண்டு கார்டுகளையும் இணைக்க வேண்டும். வரி செலுத்துவோர் வருமானவரி தாக்கல் செய்யும் அவர்களது கோப்புக்குள் சென்று தங்கள் பான்-ஆதார் இணைக்கும் நிலையைச் சரிபார்க்கலாம். வரி மின்-தாக்கல் போர்டல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக தகவலை தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான்-ஆதார் இணைக்கும் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று பார்ப்போம் வாங்க :
படி 1: வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலுக்குச் செல்லவும்
படி 2: முகப்புப்பக்கத்தில் 'விரைவு இணைப்புகள்' விருப்பத்தை 'கிளிக்' செய்யவும். இதைத் தொடர்ந்து, ‘ஆதார் நிலை’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: PAN மற்றும் ஆதார் எண்களை உள்ளிட இரண்டு புலங்களைக் கொண்ட பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.
படி 4: அதைத் தொடர்ந்து, சர்வர் பான்-ஆதார் இணைப்பு நிலையைச் சரிபார்க்கும்.பின்னர் ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.
படி 5: இரண்டு கார்டுகளும் இணைக்கப்பட்டிருந்தால், “உங்கள் பான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வரும்.
படி 6: உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகள் இணைக்கப்படவில்லை என்றால், "பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை. உங்கள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க, 'லிங்க் ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: இணைப்பு செயல்பாட்டில் இருந்தால், வரி செலுத்துவோர் இதை அவர்களின் சாளரத்தில் பார்க்க முடியும். “உங்கள் ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கை சரிபார்ப்பிற்காக UIDAI க்கு அனுப்பப்பட்டுள்ளது. முகப்புப் பக்கத்தில் உள்ள ‘ஆதார் நிலையை இணைக்கவும்’ என்ற இணைப்பைக் 'கிளிக்' செய்வதன் மூலம் பின்னர் நிலையைச் சரிபார்க்கவும்.
pan-aadhaar link
எஸ்எம்எஸ் மூலம் பான்-ஆதார் இணைக்கும் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது கீழே தரப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் பான்-ஆதார் இணைக்கும் நிலையைச் சரிபார்க்க வருமான வரித் துறை அதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இதற்காக, வரி செலுத்துவோர் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இரண்டு கார்டுகளும் இணைக்கப்பட்டிருந்தால், “ஐடிடி டேட்டாபேஸில் ஆதார் ஏற்கனவே பான் உடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வாசிக்கப்படும்.
பான் மற்றும் ஆதார் அட்டைகள் இணைக்கப்படவில்லை என்றால், “ஐடிடி தரவுத்தளத்தில் உங்கள் ஆதார் பான் உடன் இணைக்கப்படவில்லை. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி.” என்று செய்தி வரும்.
வருமான வரித்துறையின் ட்விட்டர் பதிவு இந்த இணைப்பில் உள்ளது.