ஒமிக்ரான்: மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் இருப்பு விவரம் சேகரிப்பு
தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு விவரங்களை சேகரித்து, தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யும் பணி தொடங்கி உள்ளது.;
ஒமிக்ரான் தொற்று, பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாவிட்டாலும், குறைந்தபட்ச பாதிப்பினை உருவாக்கும். இந்தியாவை பொறுத்தவரை குறைந்தபட்ச பாதிப்பு என்பதே பல லட்சம், பல கோடிகளை கடக்கும். எனவே அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பு உள்ள ஆக்ஸிஜன் அளவு, அதன் தரம், தினசரி தேவைகள், கூடுதலாக தேவைப்படும் ஆக்ஸிஜன் போன்ற பல்வேறு புள்ளி விவரங்களை தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள இடங்களில் ஆக்ஸிஜன் வழங்க தேவையான ஏற்பாடுகள் நடப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.