அதிமுகவில் போஸ்டர் யுத்தம் : ஓபிஎஸ்-க்கு ஆதரவாக புது போஸ்டரால் பரபரப்பு..!
ADMK Posters-ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ADMK Posters-ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அதிமுக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் அவ்வப்போது ஒற்றைத்தலைமை குறித்து சலசலப்பு ஏற்பட்டு பின்னர் அது அடங்கிப்போகும்.ஒருபுறம் ஓபிஎஸ் -க்கு ஆதரவாக சில நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமிக்கு சில நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து அவ்வப்போது போஸ்டர்கள் அடித்து ஓட்டுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் சற்றே ஓய்வெடுத்த போஸ்டர் யுத்தம் மீண்டும் அதன் பணியை தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சென்னை தலைமையகத்தில் நடந்தது.
அப்போது சில தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதாக தெரிகிறது. ஏற்கனவே ஒற்றைத்தலைமைக்கு யார் தலைமை ஏற்பது என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. ஒற்றைத்தலைமை வந்துவிட்டால் கட்சி வளர்ச்சிக்கு நல்லது என்று அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம். யார் அந்த ஒற்றைத்தலைமை என்பதே சிக்கலுக்கு காரணம்.
இவ்வாறிருக்க ஓபிஎஸ்க்கு ஆதரவாக, தலைமை ஏற்க வரவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, தேனி,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யார் ஓட்டினார்கள்? என்பதையெல்லாம் கண்டும் காணாமல் வழக்கம் போலவே ஓபிஎஸ் -ம் இபிஎஸ்-ம் அமைதியாக இருக்கின்றனர். அதே வேளையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் மைண்ட் வாய்ஸ் -அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..!?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2