ஆபரேஷன் மின்னல்: ரவுடிகளை அதிரடியாக கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம்

Police News -கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஆபரேஷன் மின்னல் நடவடிக்கை மூலம் இன்று காலை வரை சுமார் 2390 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்;

Update: 2022-10-11 02:30 GMT

Police News -தமிழ்நாட்டில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் வகையில் மாநில போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் போலீசார் ஆபரேஷன் மின்னல் வேட்டையில் இறங்கினர். கடந்த  72 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 2,390 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. .இதற்காக ஆபரேஷன் மின்னல் வேட்டையை போலீசார் தொடங்கி உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய, ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற அதிரடி நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.  தமிழகத்தில் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் முதல் 48 மணி நேரத்தில் 210 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகளும் அடங்குவர். சிலர் பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 979 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள். இவர்கள் மீது நன்னடத்தை காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. அதனை மீறும் பட்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனும் எச்சரிக்கையையும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.மேலும் இந்த நடவடிக்கையின்போது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தற்போது ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை 3வது நாளாக நடந்துள்ளது. இன்று காலை  நிலவரப்படி கடந்த 72 மணிநேரத்தில் நடந்த மின்னல் வேட்டையில் 2,390 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 489 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள் ஆவார்கள். 216 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் 489 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன.

இதில், திருச்சி மாநகரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள் , சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கொலை குற்றவாளிகள் , தொடர்ந்து குற்றம் செய்யும் குற்றவாளிகள் , கெட்ட நடத்தைக்காரர்கள் என 82 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல மதுரையில் ஒரே நாளில் 18  ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்த போலீஸ் நடவடிக்கை தொடர உள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்ட எஸ்பிக்களும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் உள்ள ரவுடிகள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News