இதெல்லாம் இருந்தால் அது ஒமிக்ரான் அறிகுறி
Symptoms of Omicron in Tamil -ஒமிக்ரான் வைரஸ் பாதித்தால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது தமிழில் கூறப்பட்டுள்ளது.
Symptoms of Omicron in Tamil -ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுபவர்ளுக்கு தோல், நகம், உதடு போன்றவைகளின் நிறம் வெளுத்துபோகும் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி அறிவிப்பு வெளியிட்டது.
ஒமிக்ரான் என்பது அசாதாரணமான பிறழ்வுக் கூட்டங்களைக் கொண்ட பெரிதும் மாற்றமடைந்த ஒரு வகை வைரசாகும். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பரவிய மற்ற மாறுபாடு அடைந்த வைரசைக்காட்டிலும் மிகவும் வேறுபட்டது. இப்போது பலருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், புதிய வகைகளின் அறிகுறிகள் நுட்பமாக வளர்ந்துள்ளன.
எனவே நீங்கள் முழுமையாக 2 தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியமாகும் என்பதே வல்லுனர்களின் எச்சரிக்கை. ஒமிக்ரான் பரவல் உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதில் 32 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அறிகுறிகளும் பல மாற்றம் அடைந்துள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவினாலும் டெல்டா அளவிற்கு இது ஆபத்து கொண்டதாக இதுவரை இல்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன.
அறிகுறிகள் :
omicron symptoms in tamil-தலைவலி, இருமல், சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல், லேசான காய்ச்சல், சதைகளில் வலி, மூட்டுகளில் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஒமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
பொதுவாக இந்த அறிகுறிகள் இருந்தாலும் கூட பல புதிய அறிகுறிகள் கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்டும் வருகிறது. ஒமிக்ரான் ஏற்படும் நபர்களுக்கு வாந்தி மற்றும் பசியின்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The ZOE என்னும் கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த இரண்டு புதிய அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்காவில் நோய்க் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒமிக்ரான் ஏற்படும் நபர்களுக்கு தோல், உதடு, நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். தோல் வெளுத்து போகும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தோல் நீல நிறத்திற்கு மாறும் வாய்ப்புகளும் உள்ளன. அதேபோல் உதடு, நகம் ஆகிவையும் வெளுத்து போகவோ, நீல நிறத்திற்கு மாறவோ வாய்ப்பு உள்ளது.
அவரவர் நிறத்தை பொறுத்து இந்த மாற்றம் அமையும். வெள்ளை தோல் கொண்டவர்களுக்கு நீல நிறத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கருப்பு தோல் கொண்டவர்களுக்கு வெளுத்து போக வாய்ப்புகள் உள்ளது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்த அளவே இருப்பதால் இந்த மாற்றம் உடலில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
omicron symptoms in tamil-ஒமிக்ரான் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடலில் ஆக்சிஜன் குறைந்ததற்கான அறிகுறி வந்தால் மட்டும் உடனே மருத்துவரை அணுக வேண்டுமென்றும் ஆய்வறிக்கையில் கூறபட்டுள்ளது. உடலில் ஆக்சிஜன் குறையும் போது சமயங்களில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அந்த மாதிரியான சமயத்தில் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
ஒமிக்ரான் பாதித்த பலருக்கு சுவாச பிரச்னை வருவது இல்லை. இது இருதயத்தை பெரிய அளவில் பாதிப்பதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே லேசான மூச்சு பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்படுகிறது. மனக்குழப்பம், உறக்கம் வராமை போன்ற அறிகுறிகளும் ஒமிக்ரான் நோயாளிகளிடம் ஏற்படுகிறது என்று அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி தெரிவித்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2