கொடநாடு: ஜெ மற்றும் சசிகலாவின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
கோத்தகிரி பேங்க் ஆஃப் இந்தியா கொடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு வழக்கில் விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நேரில் விசாரணை நடைபெற்றது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் ஆகியவற்றுக்கு வரிபாக்கி நிலுவை இருந்ததால், அந்த இரு எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதால் கோத்தகிரி பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.