கோத்தகிரி காந்தி மைதானத்தில் இளைஞர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை
கோத்தகிரி காந்தி மைதானத்தில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோத்தகிரி மார்க்கெட்டில் மீன் கடையில் வேலை செய்து வருபவர் அஜய் 21. இவர் குன்னூர் எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் நள்ளிரவில் காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டார். மேலும் கல்லால் முகத்தை சிதைத்து உள்ளனர் .
காலையில் நடைபயணம் மேற்கொண்டோர் இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.