குன்னூர் அருகே கூலித் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினர் இதுகுறித்து லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
குன்னூர் அருகே முட்டிநாடு பகுதியில் விவசாயி அருணாச்சலம் தோட்டத்தில் விவசாய பணிக்காக தொழிலாளர்கள் ஒரு ஜீப்பில் சென்றனர். மழையால் சேறாகி இருந்த காளான் கழிவுகளில் திடீரென வழுக்கி எதிர்பாராத விதமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலாளர்கள் சாந்தி (வயது 55), முத்துலட்சுமி (35), புஷ்பராணி (50), சரஸ்வதி (44), யசோதா (40), கவிதா (40), லதா (54) ஆகிய 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினர். இதுகுறித்து லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.