குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: வாழைகள் சேதம்
குன்னூர் குடியிருப்பு பகுதிகளில் இரவில்ஒற்றை காட்டுயானை உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மஞ்சூர் கெத்தை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை குன்னூர் அருகேயுள்ள தூதூர்மட்டம் கீழ் டெரேமியா கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழைமரங்களை நாசம் செய்தது. மேலும், இரவில் குடியிருப்பிற்குள் ஒற்றை காட்டுயானை உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த வாரம் இந்தப் பகுதியில் 4 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிட்டு இருந்தன. அதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது மீண்டும் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.