கோத்தகிரி அருகே வழி தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு
கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமை இரண்டு மணி நேரம் போராடி வீட்டின் கூரையில் இருந்து இறங்கியது;
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டெருமைகள் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளில் உலா வருகிறது.
இந்நிலையில் உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கட்டபெட்டு கிராமத்தில், அதிகாலை 3 மணி அளவில் காட்டெருமை ஒன்று வீட்டின் கூரை மீது ஏறி உள்ளது .அவ்வாறு வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் இறங்க முடியாமல் தவித்து வந்தது.
2 மணிநேரம் வீட்டின் கூரை மீது நின்ற காட்டெருமை அதிகாலை 5 மணி அளவில் கூரையின் மீது இருந்து எகிறி குதித்து தப்பி ஓடியது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.