கோத்தகிரியில் கயிறு இறுக்கி காயமடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை

கோத்தகிரியில் கழுத்தில் காயமடைந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்த வனத்துறையினர்.;

Update: 2021-08-09 08:53 GMT

காயமடைந்த காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்திய காட்சி.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகள் அதிகமாக குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று கழுத்தில் கயிறு மாட்டி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .இதனையடுத்து  வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அணையட்டி பகுதியில் காட்டெருமை இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட வனக் காப்பாளர் குருசாமி தபேலா , வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் காட்டெருமை கழுத்தில் சுற்றி இருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, காட்டெருமை மூன்று மணி நேரம் தேயிலை தோட்டத்தில் உலா வந்தது. வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை கண்காணித்து வருகின்றனர் .

Tags:    

Similar News