டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பியவருக்கு ஊட்டியில் உற்சாக வரவேற்பு
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்குபெற்று திரும்பிய வீரருக்கு ஊட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி : குன்னூர்
டோக்கியா ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிய குன்னூரை சேர்ந்த வீரருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டோக்கியோ 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் இந்தியா ஜெர்மனி அணிகள் மோதின. இதில் 5 - 4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பற்கேற்றனர்.
இதில்நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் நடைபெற்ற டோக்கியோ ஹாக்கி போட்டிகளில் வீடியோ அனலைஸ் டீம் ( Video Analzes Team) ல் தலைமை வகித்தவர். குன்னூருக்கு வந்த அசோக்குமாருக்கு பேருந்து நிலையம் அருகே நீலகிரி மாவட்ட ஹாக்கி சம்மேளனம் மற்றும் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.