குன்னூரில் தேயிலை விற்பனை சரிவு: ஒரே வாரத்தில் ரூ.2.67 கோடி வீழ்ச்சி

குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில், 23வது ஏலம் நடைபெற்றது. தற்போது தேயிலை வரத்து அதிகரித்தபோதும் சராசரி விலையும்விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Update: 2021-06-14 15:35 GMT

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. குறிப்பாக, ஊட்டி, குன்னூர், கூடலுார், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்படும் பசுந்தேயிலைகள், பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு, சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில், 23வது ஏலம் நடைபெற்றது. அதில் இலை ரகம், 19 லட்சத்து 40 ஆயிரத்து 805 கிலோவும், டஸ்ட் ரகம், 7 லட்சத்து 77 ஆயிரத்து 773 கிலோ விற்பனைக்கு வந்தது. மொத்தம், 15 லட்சத்து 35 ஆயிரத்து 657 கிலோ விற்பனையானது. சராசரி விலை, 111.86 ரூபாயாக இருந்தது கிலோவுக்கு, 5 ரூபாய் வரை விலை சரிந்தது. 17.95 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.

கடந்த வாரத்தை விட, 2.67 கோடி ரூபாய் வருமானம் குறைந்தது. கொரோனா பரவலால், கிடங்குகளுக்கு தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாததால், தேக்கமடைந்த தேயிலை மூட்டைகளால், கடந்த, 22வது ஏலம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தேயிலை வரத்து அதிகரித்த போதும் சராசரி விலையும் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Tags:    

Similar News