குன்னூரில் கட்டிடப்பணிக்கு மண் பரிசோதனை பணிகள் துவக்கம்
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் கட்டிடப் பணிகள் மேற்கொள்வதற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது;
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில், கட்டிடப்பணி மேற்கொள்வதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் சுமார் 800 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாக இருந்த நகராட்சி இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வந்தனர். இதனை அறிந்த நகராட்சி அதிகாரிகள் மூலமாக இந்த கடைகள் அனைத்தும் சமீபத்தில் அகற்றப்பட்டது.
இந்நிலையில் காலியாக உள்ள இடத்தில் கட்டிடப்பணிகள் மேற்கொள்வதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மார்க்கெட் பகுதியில் சில இடங்களை தேர்வு செய்து, அங்கு துளையிட்டு, கீழே உள்ள மண்ணை எடுத்து பரிசோதனைக்கென இருக்கும் ஆய்வகங்களில், அதை பலவிதமான சோதனைக்கு உட்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அந்த மண் எவ்வளவு அளவு எடை தாங்குகிறது என்பதை அழுத்தம் கொடுத்துச் சோதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கட்டிடத்தின் அடித்தளத்தை ஆழப்படுத்தப் பரிந்துரை செய்யப்பட்டு, எவ்வளவு ஆழத்திற்குத் துளையிடுவது என்பதை பொருத்து கட்டட பணிகள் மேற்கொள்வதற்கு நகராட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர்.