குன்னூர் அருகே மரத்திலிருந்து வாகனம் மீது விழுந்த பாம்பு: ஓட்டம் பிடித்த ஓட்டுநர்
வாகனத்தின் மீது விழுந்த 8 அடி சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.;
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரத்தில் இருந்து வாகனத்தில் மீது விழுந்த பாம்பு பதறியடித்து ஓடிய வாகன ஓட்டி.
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அரசுப்பேருந்து போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பணிமனை அமைந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து சாரைப்பாம்பு ஒன்று வெளியேறி பணிமனை செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தது.
இதனை கண்ட போக்குவரத்து ஊழியர்கள் குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பிடிப்பட்ட சாரைப்பாம்பு 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஆகும். வனப்பகுதியில் இருந்து வெளியேறி காயத்தோடு சுற்றித்திரிந்த பாம்பு குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரத்தின் மீது இருந்துள்ளது.
அப்போது அவ்வழியே வந்த வாகனத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் நயாஸ் ஆகியோர் வாகனத்தில் இருந்து பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.