ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி மொத்தம் ரூ. 19,800 அபராதம் விதித்தனர்;

Update: 2022-03-12 09:51 GMT
ஊட்டியில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்கள் பறிமுதல்

குன்னூர் நகராட்சியில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்

  • whatsapp icon

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட் ரோடு, பெட்போர்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.சோதனையின் போது 9 கடைகளில் இருந்து 7.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ரூபாய் 15,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நீலமேகம் தலைமையில் குழுவினர் உதகை பிங்கர்போஸ்ட், ரோகிணி சந்திப்பு, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.5 கடைகளில் தடை செய்த 2.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூபாய் 4,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூபாய் 19,800 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News