கிணற்றில் விழுந்த சிறுத்தைப்புலி பத்திரமாக மீட்பு
மீட்கப்பட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினர் அப்பர் பவானி வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
சமீபகாலமாக கோத்தகிரி நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி, காட்டு மாடு, சிறுத்தைப்புலி போன்ற வன விலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ள நிலையில், கோத்தகிரி நகர்பகுதியை ஒட்டியுள்ள கிளப்ரோடு பகுதியில் உயிருடன் சிறுத்தைப்புலி ஒன்று விழுந்துள்ளது.
காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுக்கும் போது சிறுத்தைப்புலியின் சத்தத்தை கேட்டு உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்புதுறையினர் சிறுத்தையை கிணற்றில் இருந்து மீட்டெடுக்கும் பணியில் 5 மணி நேரம் போராடி பத்திரமாக சிறுத்தையை மீட்டனர்.
மீட்பு பணியில் மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸலே, உடனிருந்தனர் பின்பு மீட்கப்பட்ட சிறுத்தைப்புலியை அப்பர் பவானி வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.