குன்னூரில் ரூ.1 லட்சம் திருட்டு; கொள்ளையர்கள் சிக்கினர்
குன்னூரில் 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கினர்.;
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள பெட்போர்ட் பகுதியில் இ-காம் எக்ஸ்பிரஸ் என்கிற கொரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 11 ம் தேதி வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கான தொகை 1 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அன்று இரவு கொரியர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஒரு லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் மேல்குன்னூர் காவல்துறையினர் தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த பெட்போர்ட் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞன் ஜான் என்பதும் மற்றும் அவரது நண்பர் உபதலை பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞன் ராஜேஸ் ஆகியோர் பணத்தை திருடியாதாக ஒப்பு கொண்டனர்.
இதனையடுத்து, இரு கொள்ளையர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.