குன்னூர் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டெருமை

குன்னூர் பேருந்து பணிமனை அருகே காலில் உடைந்த நிலையில் சுற்றித்திரியும் காட்டெருமைக்கு சிகிச்சையளிக்க கோரிக்கை

Update: 2021-08-28 04:07 GMT

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தடுப்பு சுவரிலிருந்து தவறி விழுந்த காட்டெருமை, கால்கள் உடைந்ததால் நடக்க முடியாமல் தவித்து வருகிறது. இதற்க்கு  சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்க வேண்டுமென   அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம்,  குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம்  அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு , மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. அவ்வப்போது பொது மக்களையும் தாக்குவதால் மனிதர்கள்  விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குன்னூர் அரசு பேருந்து பணிமனை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், காட்டெருமை  தடுப்பு சுவரிலிருந்து தவறி கீழே விழுந்து முன் வலதுகால் முறிவு ஏற்பட்டு  கால்கள் கீழே ஊன்ற  முடியாமல், சாலையிலே படுத்து கிடந்தது. இதுகுறித்து  அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து  காட்டெருமை கால்கள் உடைந்திருப்பதை உறுதி செய்தனர்.மேலும், அதே பகுதியில் காட்டெருமை உலா வருவதால் சிகிச்சை அளித்து வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News