அறநிலையத்துறையை கண்டித்து கோத்தகிரியில் படுகர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி, கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-11 10:12 GMT

கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில், இந்து அறநிலையத்துறை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. 

கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில்,   குலதெய்வமான எத்தையம்மனை, படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இந்த கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்பு பலகை கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால், கிராம மக்கள் ஆவேசமடைந்தனர்.  முதற்கட்டமாக நேற்று,  இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த நடுஹட்டி கைகாரு தலைவர் நஞ்சன் என்பவரை உடனடியாக பதவியில் இருந்து விலகக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, இன்று உண்ணாவிரத போராட்டட்தை படுகர் இன மக்கள் நடத்தி வருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலும் கலாச்சார பாடல்களை பாடி,  உண்ணாவிரதம் மேற்கொண்டனர் .ஒரு சில பெண்கள், உண்ணாவிரத இடத்தில் மயங்கி விழுந்தனர். தங்களது கலாச்சாரத்தை ஒடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்கும் நடவடிக்கையை இந்து அறநிலையத்துறை கைவிடுட வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News