உதகை குந்தா துணை மின்நிலையத்தில் 29 ம் தேதி மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குந்தாவிற்குட்பட்ட 16 பகுதிகளில் வரும் 29 ம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின் பொறியாளர் அறிவிப்பு.;

Update: 2021-09-27 14:00 GMT

பைல் படம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில், குந்தா துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 29.09. 21 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை துணை மின் நிலையத்தை சார்ந்த மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டக் கொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய் சோலை, கோரக்குந்தா இரியசீகை, மஞ்சகொம்பை பெங்கால் மட்டம், அரையட்டி கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கன்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News