நீலகிரியில் வரும் 27 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள்,சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 777 மையங்களில் நடக்கிறது.

Update: 2022-02-24 23:30 GMT

நீலகிரி மாவட்டத்தில்,  5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 27.02.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 777 மையங்களில் நடக்கிறது.

மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 5 வயதிற்குட்பட்ட, 40,890 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த பணியில் பொது சுகாதாரத்துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு, 4 பேர் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 3,203 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து,  தரமானதுடன் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது.

எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் முகாமுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News