ஆட்டோ ஆம்புலன்ஸ் வழங்கிய பெண்ணுக்கு மன்-கீ-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் வாழ்த்து
குன்னுாரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.;
குன்னுாரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் மோடி மன்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தது நீலகிரிக்கே பெருமை அளிக்கிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டிச்சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி. இவரது முயற்சியால், நீலகிரியில் முதல் முறையாக 'ஆம்புரிக்ஷ்' என அழைக்கும், 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் ரூ.21 லட்சம் செலவில் நீலகிரியில் கடந்த 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இவை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து, 470 சிசி திறன் கொண்ட பஜாஜ் மாக்சிமா, ஆம்புலன்சாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்சில் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதி, ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட முக்கிய வசதிகள் உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி மன் - கி- பாத் நிகழ்ச்சியில், ராதிகா சாஸ்திரியின் சமூக சேவை குறித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இது குறித்து ராதிகா சாஸ்திரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு அளித்த பிரத்தேக பேட்டியில், பிரதமர் வாழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் இனிவரும் காலங்களில் ஏழை மக்கள் மற்றும் ஆதிவாசி மக்களும் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.