கோத்தகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. நெடுகுளா, கேர்க்கம்பை, மிளிதேன், பேரகனி, கொட்டநள்ளி, சுண்டட்டி முதலான பத்து கிராம பொதுமக்கள் தங்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்து கொள்ள நெடுகுளா ஆர்மப சுகாதார நிலையத்திற்கு தான் வரவேண்டும்.
இந்நிலையில் நேற்றைய தினம் மிச்சியம்மாள் என்ற மூதாட்டிக்கு இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இரவு நேர மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாததால் மூதாட்டியை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
எனவே நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர் மற்றும் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும்,108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.