குன்னுாரில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் துவக்கம்

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.;

Update: 2021-06-28 15:23 GMT
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

குன்னூர் அரசு மருத்துவமனையில் தனியார் பங்காளிப்புடன் ஆக்சிஜன் பிளான்ட் திறந்து வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாதம் இறுதிக்குள் பழங்குடியினர் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் 27,500 பழங்குடியினர் உள்ளார்கள். இதில் அரசு தெரிவித்துள்ள வயதுக்குட்பட்டவர்கள் 21,800 நபர்கள் உள்ளார்கள். இதில் 21,500 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 250 முதல் 300 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

அதிகபட்சமாக நாளைக்குள் விடுபட்ட பழங்குடியினர் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100% நிலையை அடைய இருக்கிறோம் எனவும், 100% தேயிலை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது எனவும், இதுவரை மாவட்டத்தில் 2.89 இலட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனக் கூறினார்.


Tags:    

Similar News