நீலகிரி: 13 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு அமைக்கப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி உதகை நகராட்சியில் ரெக்ஸ் மேல்நிலை பள்ளி, குன்னூர் நகராட்சியில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, நெல்லியாளம் நகராட்சியில் புனித பிரான்சிஸ் சேவியர் ஆரம்பப்பள்ளி, கூடலூர் நகராட்சி, ஓவேலி பேரூராட்சிகளுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, உலிக்கல் பேரூராட்சியில் சேலாஸ் சிறுமலர் ஆரம்பப்பள்ளி, ஜெகதளா பேரூராட்சியில் ஜெகதளா பேரூராட்சி அலுவலக கட்டிடம், கேத்தி பேரூராட்சியில் சாந்தூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி பேரூராட்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம், அதிகரட்டி பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, சோலூர் பேரூராட்சியில் நாகர்தனை அரசு மேல்நிலைப்பள்ளி, நடுவட்டம் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி, தேவர்சோலை பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு அமைக்கப்பட்டுள்ளது.