குன்னூர் இராணுவ மையத்திற்கு புதிய லெப்டினன்ட் கமாண்டன்ட்
ஐக்கிய நாடுகளின் தூதரகத்திலும், வியட்நாம், கம்போடியாவில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் மோகன் பணிபுரிந்து உள்ளார்;
குன்னூர் வெலிங்டனில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இந்தியா மற்றும் நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி கமாண்டன்ட் ஹாலன், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் மோகன் புதிய கமாண்டன்ட் நியமிக்கப்பட்டார். அவர் புதிதாக பொறுப்பேற்று கொண்டார்.
மோகன், கடந்த 1986-ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவ விமான பாதுகாப்பு படையில் சேர்ந்தார் இவர், தமிழகத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவ துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவர் ஐக்கிய நாடுகளின் தூதரகத்திலும், வியட்நாம், கம்போடியாவில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணிபுரிந்து உள்ளார்.
கடந்த 1948-ம் ஆண்டு குவெட்டா (பாகிஸ்தானில்) இருந்து இடம்பெயர்ந்த வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி 74 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.