குன்னூரில் தொழில் போட்டி காரணமாக ஒருவர் கொலை

குன்னூரில், தொழில்போட்டி காரணமாக திமுக அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2021-07-26 16:20 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள ஆடர்லி செல்லும் சாலையில், மூலக்கடை என்னும் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் நடராஜ். இவர்,  திமுக கிளை செயலாளரும் ஆவார். அவரது கடையின் அருகே முத்துகுமார் என்பவரும் கடை நடத்தி வருகிறார்.  தொழில் போட்டி  காரணமாக, இவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக முத்துக்குமார், நடராஜை கல்லால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நடராஜ்,  மயங்கி விழுந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி நடராஜ் உயிரிழந்தார்.  குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக, திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்,  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News