கோத்தகிரியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி.;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, சோலுர் மட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதியம் முதலே மிதமான மழை பெய்தது. கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அத்துடன் குளிர் காலநிலை நிலவி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேயிலை தோட்ட விவசாயிகள் அதிக அளவு மகசூல் கிடைக்கும் எனவும் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.