குன்னூரில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் ஆட்டோ மினி ஆம்புலன்ஸ் சேவை

குன்னூரில் விரைவில் ஆட்டோ மினி ஆம்புலன்ஸ் சேவை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட உள்ளது.

Update: 2021-07-02 02:00 GMT

குன்னூரில், தனியார் அமைப்பு சார்பில், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வர உள்ள ஆட்டோ மினி ஆம்புலன்ஸ் வாகனங்கள்.

நீலகிரி மாவட்டத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் , 23, இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று மற்றும் சாலை விபத்துகள் ஏற்பட்டால் பாதிக்கப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில், 108 ஆம்புலன்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போது,  இதன் தேவை அதிகரித்துள்ளதால் குன்னூரில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன், புதிய நவீன கருவிகளுடன் கூடிய 6 ஆட்டோ மினி ஆம்புலன்ஸ்கள்,  ராதிகா சாஸ்திரி என்னும் தன்னார்வலர் சார்பாக,  குன்னூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், உதகை  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர், பொதுமக்கள் சேவைக்காக இவற்றின் சேவையை தொடங்கி வைக்க உள்ளனர்.

Tags:    

Similar News