மேட்டுபாளையம் சாலையில் பூத்து குலுங்கும் மே ஃப்ளவர்
ஆண்டுதோறும் கோடை சீசனில்பூக்கும் மலர்கள்;
நீலகிரி மாவட்டம், குன்னூர், மேட்டுப்பாளையம் மலைபாதையின் சாலையோர மரங்களில், இயற்கை சுழற்சியின் அடிப்படையில் சரியான நேரத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்க 'மே பிளவர்' மலர்கள் பூத்து குலுங்கினாலும் பார்வையிட சுற்றுலா பயணிகள் இல்லை.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டத்துக்கு, ஏராளமான வெளிநாட்டு மரங்கள், செடிகள் கொண்டு வந்து நடவு செய்யப்பட்டன. இதன் வரிசையில், 'மே பிளவர்' என அழைக்கப்படும், டிலோனிக்ஸ் தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இந்த மரத்தின் சிவப்பு மலர்கள் வசீகரிக்கிறது.
வட கிழக்கு அமெரிக்காவை தாயகமாக கொண்ட அலங்கார செடியான இந்த தாவரம், கோடை காலத்தில் பூக்கிறது. இவ்வகை பூக்கள் தற்போது மேட்டுப்பாளையம் - -குன்னுார் மலைபாதையில் இரு புறமும் பசுமையான மலைகள் இடையே மலர்ந்து வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
ஆண்டு தோறும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று வசீகரிக்கும் இந்த மலா்களை ரசிக்க தற்போது கொரோனா பாதிப்பால் சுற்றுலாப்பயணிகள் யாரும் இல்லை.