குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்
குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சைப் பிரிவின் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சைப் பிரிவின் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, குன்னூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி கருவி திறந்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய தீவிர சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வெண்டிலேட்டர் படுக்கைகள், நவீன நடமாடும் வென்டிலேட்டர் கருவி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தோருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க பயனுள்ளதாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.